Breaking News
Home / செய்திகள் / நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை உயர்கிறது

நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை உயர்கிறது

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை 3 ரூபாவால் அதிகரிப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 137 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் , அதன் புதிய விலை 157 ரூபாவாகும்.

ஒடோ டீசல் லீற்றரொன்றின் விலை ஒரு ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி , ஒடோ டீசலின் புதிய விலை 104 ரூபாவாகும்.

சூப்பர் டீசல் லீற்றரின் விலை 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் , அதன் புதிய விலை 134 ரூபாய் என நிதி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

About admin

Check Also

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க ஐ.தே.கட்சியும் ஜே.வி.பியும் கொள்கை ரீதியில் இணக்கம்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது சம்பந்தமாக ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் கொள்கை ரீதியான …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *