Breaking News
Home / செய்திகள் / ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கூறும் அனைத்தையும் ஏற்க முடியாது: மறுத்தது இலங்கை அரசு

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கூறும் அனைத்தையும் ஏற்க முடியாது: மறுத்தது இலங்கை அரசு

இலங்கை சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தயாரித்துள்ள அறிக்கையில் உள்ள அனைத்தையும் ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தயாரில்லை என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச நிலையியல் கட்டளைச் சட்டத்தின் 27/2 கீழ் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்து விடயங்களை ஏற்றுக்கொள்ள தயாரில்லை. ஏற்றுக்கொள்ள கூடியவற்றை ஏற்றுக்கொள்வோம்.அரசாங்கம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிடம் மேலும் இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் கேட்டுள்ளது. அது தொடர்பாக அனுப்பியுள்ள கடிதத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் நாம் தெரிவித்துள்ளோம் எனவும் அமைச்சர் திலக் மாரப்பன குறிப்பிட்டுள்ளார்.

About admin

Check Also

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க ஐ.தே.கட்சியும் ஜே.வி.பியும் கொள்கை ரீதியில் இணக்கம்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது சம்பந்தமாக ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் கொள்கை ரீதியான …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *