Breaking News
Home / செய்திகள் / மைத்திரியிடம் கடும் எதிர்ப்பை காட்டியுள்ள மஹிந்த தரப்பு

மைத்திரியிடம் கடும் எதிர்ப்பை காட்டியுள்ள மஹிந்த தரப்பு

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் நல்லிணக்க யோசனையில் இலங்கை அரசாங்கமும் அனுசரணையாளராக வருவது தொடர்பில் மஹிந்த தரப்பு கடும் ஆட்சேபனையை வெளியிட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமையன்று ஜனாதிபதியை சந்தித்தபோது இந்த ஆட்சேபனை வெளியிடப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட யோசனையின் புதிய வடிவத்துக்கு ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் அனுசரணை வழங்குவதை தாம் எதிர்ப்பதாக இதன்போது மஹிந்த தரப்பினர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

தினேஸ் குணவர்த்தன, ஜீ.எல்.பீரிஸ், ராஜா கொலுரே, திஸ்ஸ விதாரன, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரே ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.

இதன்போது இலங்கைக்கு எதிரான புதிய யோசனையில் இருந்து விலகி கொள்ளுமாறு மஹிந்த தரப்பினர் ஜனாதிபதியிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

About admin

Check Also

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *