Breaking News
Home / செய்திகள் / அமெரிக்காவில் கோத்தபாயவுக்கு எதிராக களமிறங்கும் பிரபல சட்டத்தரணி! அதிர்ச்சியில் ராஜபக்ஷ குடும்பம்

அமெரிக்காவில் கோத்தபாயவுக்கு எதிராக களமிறங்கும் பிரபல சட்டத்தரணி! அதிர்ச்சியில் ராஜபக்ஷ குடும்பம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கை சட்டத்தரணி ஸ்கொட் கிள்மரே நடத்துகிறார்.

ஊடகவியலாளர் மேரி கொல்வின் படுகொலை வழக்கில் சிரிய அரசாங்கத்துக்கு எதிராக வாதாடி வெற்றி பெற்று, 300 மில்லியன் டொலர்களை அபராதமாக செலுத்த வைத்தவர்.

இந்நிலையில் கோத்தபாயவுக்கு எதிராக இரு வழக்குகள் அமெரிக்காவில் தொடுக்கப்பட்டுள்ளன.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் கோத்தபாயவுக்கு எதிராக, லசந்தவின் மகள் அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

அதேவேளை தன்னை கொடூரமாக சித்திரவதை செய்ததாக கோத்தபாயவுக்கு எதிராக தமிழர் ஒருவர் கலிபோர்னியாவில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

கோத்தபாயவுக்கு எதிராக வழக்கு செய்தமையை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு ஒன்று லண்டனில் நடைபெறுகிறது. இதில் வழக்கினை தாக்கல் செய்த ரோய் சமாதானம் வழக்கு தொடர்பாக அறிவிக்கவுள்ளார்.

சித்திரவதை செய்வதற்கான உத்தரவு மற்றும் கட்டளைகள் அனைத்தும் கோத்தபாய ராஜபக்சவினால் வழங்கப்பட்டதெனவும், இந்த செயற்பாடுகளுக்கு கோத்தபாய சட்டபூர்வமாக பொறுப்பு கொண்டவர் என சட்டத்தரணிகள் வாதாடவுள்ளனர்.

எனினும் கோத்தபாய பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டை மையமாகக் கொண்டிருந்ததாக பல ஆண்டுகளாக கோத்தபாய தனது பகிரங்க அறிக்கைகளில் தெளிவுபடுத்தியுள்ளார் என கிள்மர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவங்கள் ஐ.நா. சபையினால் ஆவணப்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டதுடன் இலங்கை அரசாங்கம் இந்த குற்றச்சாட்டுக்களை மீண்டும் மீண்டும் எதிர்கொண்டது.

பாதுகாப்புச் செயலாளர், என்ற ரீதியில் இந்த முறைகேடுகள் நடைபெற்றதா அல்லது சரியான முறையிலேயே செயற்பட்டார்களா என நன்கு அறிந்திருந்தார், ஆனால் அவர் குற்றவாளிகளை விசாரணை செய்ய அல்லது தண்டிக்க சட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

இந்த நிலையில் இது தொடர்பில் வழக்கு விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சட்டத்தரணியான ஸ்கொட் கிள்மரே பல்வேறு வழக்கினை வாதாடி வெற்றி பெற்றுள்ளார். இதன்காரணமாக கோத்தபாயவுக்கு எதிராக தீர்ப்புகள் வரலாம் என சர்வதேச ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் கோத்தபாய கைது செய்யப்படலாம் என, ராஜபக்ஷ குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

About admin

Check Also

இலங்கை மீதான தாக்குதலுக்கு காரணம் இதுதான்! ஐ.எஸ் அமைப்பின் தலைவர்

சிரியாவின் நகரமொன்றான பாகூஸ் எனப்படும் ஐ.எஸ் அமைப்பின் கோட்டையாக இருந்த பிரதேசத்தை இழந்தமைக்கு பழி தீர்க்கவே, இலங்கை மீது தாக்குதல்​களை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *