Breaking News
Home / செய்திகள் / அவசர ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகும் மைத்திரி

அவசர ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகும் மைத்திரி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்பட போகும் வேட்பாளர் சம்பந்தமாக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள மோதல்கள் அதிகரித்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் உடனடியாக ஜனாதிபதித் தேர்தலை அறிவிப்பது குறித்து ஜனாதிபதியின் ஆலோசகர்கள் கவனம் செலுத்தி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நிறுத்துவதா அல்லது பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை நிறுத்துவதா என்பது தொடர்பாக அந்த கட்சிக்குள் கடுமையான வாத விவாதங்கள் நடந்து வருகின்றன.

அமைச்சர்கள் சஜித் பிரேமதாச மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் இடையில் தற்போது கடும் சொற் பிரயோகங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த எதிர்பார்த்துள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளமை மற்றும் அவரது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக அந்த கட்சியும் கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது.

அரசியல் ரீதியாக கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவசரமாக ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்லுமாறு ஜனாதிபதியின் ஆலோசகர்கள் ஜனாதிபதி அறிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் அஜித் பீ. பெரேரா, ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக தற்போது சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

நாட்டில் முன்னேற்றமடைந்து வரும் பொருளாதார வளர்ச்சியை சீர்குலைக்க சிலர் இந்த சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பார் எனவும் அதில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது மட்டுமே தற்போது பொருந்தமானதாக இருக்கும் எனவும் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

About admin

Check Also

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *